மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: தொழிலாளி தூக்கு‌ப்போட்டு தற்கொலை


மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:   தொழிலாளி தூக்கு‌ப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

வேலகவுண்டம்பட்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகன் பாஸ்கரன் (வயது 38). ரிக் வண்டியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மீனா என்ற மனைவியும், கோபி, ரோகித் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இந்தநிலையில் பாஸ்கரன் ரிக் வண்டியில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் மீனா கணவரிடம் கோபித்து கொண்டு இரு மகன்களையும் அழைத்து கொண்டு கணக்கம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

விசாரணை

இதனால் மனமுடைந்த பாஸ்கரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். .தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் ‌‌‌‌பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story