கூலித்தொழிலாளி தற்கொலை


கூலித்தொழிலாளி தற்கொலை
x

பள்ளிபாளையமத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் கோவிந்தம்பாளையம் பகுதியியை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 54). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பானு. இவர்களுடைய மகன் சபிக் அலி. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்கனவே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த முகமது பஷீர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முகமது பஷீர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story