அரசு ஊழியர் தற்கொலை


அரசு ஊழியர் தற்கொலை
x

சேந்தமங்கலம் அருகே அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரபு (வயது 30). இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் யூனியன் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக பிரபு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் நேற்று வீட்டு மாடியில் இருந்த முற்றத்தில் தூக்கு ப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது பெற்றோர் மகன் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். அதைத் தொடர்ந்து சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு பிரபுவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story