செல்போனில் வீடியோ பேசி விட்டுபெண் தூக்குப்போட்டு தற்கொலைதிருச்செங்கோட்டில் பரபரப்பு


செல்போனில் வீடியோ பேசி விட்டுபெண் தூக்குப்போட்டு தற்கொலைதிருச்செங்கோட்டில் பரபரப்பு
x
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டில் செல்போனில் வீடியோ பேசி விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டிட மேஸ்திரி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது 50. கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சிவகாமி (45). இவர்களுக்கு பிரகாஷ் என் மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரகாஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கீர்த்தனாவுக்கு திருணமாகி திருச்செங்கோட்டில் வேறு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு கீர்த்தனா தாயார் சிவகாமிக்கு செல்போனி் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்காததால் தந்தை செல்வத்திற்கு போன் செய்தார். இதையடுத்து செல்வம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிவகாமி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகாமி இறந்து விட்டதாக கூறினர்.

வீடியோ

இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த சிவகாமியின் செல்போனில் சுமார் 9 நிமிடம் பேசும் வீடியோ பதிவு இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் சிவகாமி நகையை வைத்து பணம் வாங்கியதாகவும், அதற்கு பெரும்பகுதி பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஆனால் மீதி பணத்தை கேட்டு அந்த பெண் அடிக்கடி நெருக்கடி கொடுத்ததாக இருந்தது.

மேலும் தனது மகனிடம் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளுமாறும் வீடியோவில் இருந்தது. இந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார் சிவகாமி வீடியோவில் கூறிய பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் செல்போனில் பேசி வீடியோ பதிவு செய்து விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story