நாமக்கல் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
நாமக்கல்
நாமக்கல் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெண்
நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தை சேர்ந்தவர் மோகன சுந்தரி (வயது 40). இவருடைய கணவர் சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். மோகனசுந்தரி தனியார் வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே நேற்று காலை மோகன சுந்தரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணை
பின்னர் அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story