ராசிபுரத்தில்பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரம்:
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் தியாகு. இவருடைய மனைவி ராஜலட்சுமி. டாக்டராக உள்ளார். இவர்களுடைய மகள் சுவாதி (வயது 17). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் இருந்த சக மாணவிகள் வகுப்புக்கு சென்று விட்ட நிலையில் மாணவி சுவாதி அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ராசிபுரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.