அரூர் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

அரூர்:
அரூர் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பே.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் கவிப்பிரியா (வயது 17). இவர் அரூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிப்பிரியா வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது.
தற்கொலை
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கவிப்பிரியாவை அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிப்பிரியா உயிரிழந்தார். அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






