தர்மபுரி அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
தர்மபுரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருத்து வேறுபாடு
தர்மபுரியை சவுளுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 36). தொழிலாளி. இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு முத்துலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணை
இதனால் முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் ஆம்பூரில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இதனால் வெங்கடாஜலபதி மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் வெங்கடாஜலபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story