கீரம்பூர் அருகே பொக்லைன் எந்திர ஆபரேட்டர் தற்கொலை


கீரம்பூர் அருகே பொக்லைன் எந்திர ஆபரேட்டர் தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 2:11 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

கீரம்பூர் அருகே பொக்லைன் எந்திர ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொக்லைன் ஆபரேட்டர்

கீரம்பூர் அருகே உள்ள அப்பிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் தனசேகரன் (வயது 32). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். திருமணமாகாத இவர் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்தனர்.

சம்பவத்தன்று அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை சந்திரன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த தனசேகரன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை.

விஷம் குடித்து தற்கொலை

இந்தநிலையில் சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் செட்டுக்காரன்குட்டை அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தது பொக்லைன் எந்திர ஆபரேட்டர் தனசேகரன் என்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து தனசேகரனின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story