எருமப்பட்டி அருகே செங்கல் சூளையில் வேலை செய்த பெண் தற்கொலை


எருமப்பட்டி அருகே செங்கல் சூளையில் வேலை செய்த பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே செங்கல் சூளையில் வேலை செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கள் சூளை

தஞ்சாவூர் மாவட்டம் வீரியங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 33). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் ராஜகுமாரி தனது கணவரை பிரிந்து, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி புதுக்கோட்டை பிரிவு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜா (46) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்தனர். மேலும் செங்கல் சூளையில் தங்கி, அங்கு வேலை பார்த்து வந்தனர்.

தற்கொலை

இந்தநிலையில் ராஜகுமார், ராஜா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜகுமாரி கோபித்து கொண்டு, வீட்டுக்கு திரும்பினார். மேலும் மனவேதனையில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ராஜகுமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story