பெண் விஷம் குடித்து தற்கொலை


பெண் விஷம் குடித்து தற்கொலை
x

நாமக்கல்லில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

நாமக்கல்

நாமக்கல் நகராட்சி சின்னமுதலைப்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் பிரவின்குமார். இவரது மனைவி ரேவதி (வயது22). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், தற்போது குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரேவதி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த மாதம் 11-ந் தேதி வலி தாங்க முடியாத அவர் விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்இன்றி ரேவதி பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது தாயார் தமிழரசி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேவதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான திருச்சி உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story