விஷம் குடித்து பெண் தற்கொலை



ஓசூர்:
ஓசூர் அரசனட்டியை சேர்ந்தவர் சந்திரப்பா. இவருடைய மனைவி அமராவதி (வயது 33). குடும்ப பிரச்சினை காரணாக இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமராவதி இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அமராவதி கடந்த 7-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமராவதி இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire