கட்டிட மேஸ்திரி தற்கொலை


கட்டிட மேஸ்திரி தற்கொலை
x

சேந்தமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி-பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சூர்யா (24) என்ற மகன் உள்ளார். இதனால் தனிமையில் இருந்து வந்த அவர் நேற்று திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது மகன் பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயனின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story