நல்லம்பள்ளி அருகேவிவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி
நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 37). விவசாயி. இவருக்கு ரம்யா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரம்யா கணவரிடம் கோபித்து கொண்டு ஊத்துக்குழி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்த கோவிந்தன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.