கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவி

கொல்லிமலை ஒன்றியம் தேவனூர் நாடு ஊராட்சி பின்னம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவருடைய மகள் ராதிகா (வயது 18). இவர் கொல்லிமலை செம்மேடு ஜி.டி.ஆர். உண்டு உறைவிடப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை மாணவியின் பெற்றோர் அடிவாரப்பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் ராதிகா மட்டும் தனியாக இருந்தார். திடீரென அவர் வீட்டு முற்றத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வாழவந்திநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதையடுத்து போலீசார் ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story