மோளியப்பள்ளி ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் தற்கொலை


மோளியப்பள்ளி ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் தற்கொலை
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு ஒன்றிய மோளியப்பள்ளி ஊராட்சி மாச்சாம்பாளையம் தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். லாரி டிரைவர். இவருடைய மனைவி தங்கமணி (வயது 40). இவர் மோளியப்பள்ளி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் ஆவார். இந்தநிலையில் தங்கமணி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story