பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

இண்டூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி

குடும்ப தகராறு

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நத்தஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் சசிகலா (வயது 32). இந்த நிலையில் சசிகலாவுக்கும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவரிடம் ஏற்பட்ட குடும்ப தகராறில் கோபித்து கொண்டு நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சசிகலா சென்றார்.

விசாரணை

இதையடுத்து நேற்று முன்தினம் சசிகலா தனது தாய் வீட்டில் யாரும் இல்லாதபோது விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். சசிகலாவின் தாய் மாது நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றனர்.

பின்னர் தூக்கில் தொங்கிய சசிகலாவை மீட்டனர். அப்போது சசிகலா இறந்து விட்டது தெரியவந்தது. இதுகறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இண்டூர் போலீசார் சசிகலாவின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story