மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை


மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2023 12:30 AM IST (Updated: 27 April 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

பாரூர் அருகே உள்ள பாலேகுளியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 83). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மீனாட்சி கடந்த 23-ந் தேதி மாலை விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story