கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் 6 பேர் தற்கொலை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் 6 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2023 12:30 AM IST (Updated: 29 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பெண்கள்

ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மனைவி சாவித்திரி (வயது 45). கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த சாவித்திரி கடந்த 26-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (30). இவர் மத்திகிரி அருகே பூனப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த முனியம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப பிரச்சினை

கந்திகுப்பம் அருகே உள்ள வெண்ணம்பள்ளியை சேர்ந்தவர் மகேஷ் (42). தின்பண்டங்கள் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மகேஷ் கடந்த 6 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மகேசிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மகேஷ் கடந்த 26-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தனப்பள்ளி பங்களா தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (30). கூலித்தொழிலாளி. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் நாராயணசாமியின் மனைவி அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 26-ந் தேதி மன உளைச்சலில் இருந்த நாராயணசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

உத்தனப்பள்ளி அருகே உள்ள பண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மனைவி அர்ச்சனா (28). கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதில் மனமுடைந்த அர்ச்சனா கடந்த 25-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஊத்தங்கரை அருகே மயிலாடும்பாறை பக்கமுள்ள மண்குன்றம் மலைப்பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (40). கூலித்தொழிலாளி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 27-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story