பரமத்தி அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


பரமத்தி அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள சூரியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் ரவிக்குமார் (வயது 36). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் குழந்தைகள் இல்லை. ரவிக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த அவர், கடந்த 24-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவிக்குமார் பலியானார். தகவல் அறிந்த பரமத்தி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story