கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மது குடிக்கும் பழக்கம்
கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி அருகே உள்ள சிட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியை சேர்ந்தவர் கோமது (48). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூலித்தொழிலாளி
சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் தோழன் (78). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் கடந்த 28-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.