இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கொல்லிமலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேந்தமங்கலம்
இளம்பெண்
கொல்லிமலை ஒன்றியம் திண்ணனூர் நாடு ஊராட்சியில் உள்ள சேத்து பலாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 36). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 6½ ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தொிகிறது. மேலும் ஜீவிதா வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார். இ்ந்தநிலையில் ஜீவிதா ேநற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாவு
சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஜீவிதாவை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஜீவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.