கடத்தூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை


கடத்தூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

கடத்தூர் அருகே உள்ள லிங்கநாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி வாணி (27). இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் பெற்றோர் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வர வேண்டும் என வாணியை சங்கர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த வாணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வாணி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இந்த தற்கொலை தொடர்பாக கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story