பொம்மிடி அருகேஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


பொம்மிடி அருகேஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2023 7:00 PM GMT (Updated: 4 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கூலித்தொழிலாளி

தர்மபுரி அருகே உள்ள வெங்கட்டம்பட்டி திருமலைகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விஜயன். கூலித்தொழிலாளி. இவருக்கு அலமேலு என்ற மனைவியும், தீபா ஸ்ரீ (வயது 20), தாமரை செல்வி, (17) என்ற 2 மகள்களும், வினோதன் (7) என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் குடும்பத்தில் போதுமான வருமானம் இல்லாததால் பொம்மிடி அருகே கந்தகவுண்டனூரில் உள்ள விஜயனின் சகோதரர் கண்ணன் என்பவரது வீட்டில் 2 மகள்களை தங்கி படிக்க வைத்தனர். இதில் தீபா ஸ்ரீ 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

விசாரணை

இந்த நிலையில் கண்ணன் வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொண்டு மனநலம் சரியில்லாதவர் போல் பேசி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த 28-ந் தேதி இரவு தீபா ஸ்ரீ வீட்டில் இருந்தவர்களிடம் தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா ஸ்ரீ உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய தாய் அலமேலு பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story