பெண் உள்பட 2 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை


பெண் உள்பட 2 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை
x

ஓசூர் அருகே வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

குடும்ப தகராறு

பாகலூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் எல்லப்பா. இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 38). இவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே எக்கண்டஅள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் எல்லப்பா அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. அதற்கு மஞ்சுளா மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மஞ்சுளா, பாகலூர் காசி விஸ்வநாதர் கோவில் பின்புறம் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் உடல் மீட்கப்பட்ட நிலையில் இதுகுறித்து எல்லப்பா கொடுத்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எலக்ட்ரீசியன்

மத்திகிரி தின்னூரை சேர்ந்தவர் தியாகராஜன் (31). எலக்ட்ரீசியன். கடந்த ஒரு மாதமாக இவர் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கேட்டனர். இதனால் மனமுடைந்த தியாகராஜன் அந்திவாடியில் உள்ள ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story