கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை


கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
x

தர்மபுரியில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி

தர்மபுரியில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி வாலிபர்

தர்மபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். நெசவு தொழிலாளி. இவருடைய மகன் லோகசந்தர் (வயது 23). இவர் பி.எஸ்சி. படித்து விட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு உரிய வேலை கிடைக்காத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற லோகசந்தர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அன்னசாகரத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் மேல் பகுதியில் அவருடைய காலணி மற்றும் செல்போன் இருந்தது. இதனால் அவர் கிணற்றில் குதித்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் இது பற்றி தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தற்கொலை

இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது கிணற்றுள் லோகச்சந்தர் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த தர்மபுரி டவுன் போலீசார் லோகசந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story