தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை
கம்பைநல்லூர் அருகே தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்
கம்பைநல்லூர் அருகே தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வடமாநில தொழிலாளி
மேற்கு வங்க மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம் சட்பட்டா பகுதியை சேர்ந்தவர்கள் கவுதம்ரஜாக் (வயது 23). ராஜிப்பட்ரா (22), அட்னோ நாயக். இவர்கள் 3 பேரும் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே செங்குட்டை பகுதியில் தங்கி சிப்காட் தொழிற்சாலையில் கம்பி கட்டும் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மதிய உணவிற்காக அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சாப்பிட்டனர்.
பின்னர் கவுதம் ரஜாக் மட்டும் செல்போனுக்கு சார்ஜர் போட்டு வருவதாக கூறினார். இதை தொடர்ந்து மற்ற 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கவுதம்ரஜாக் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து என்ஜினீயர் சுரேஷ் மற்றும் ராஜிப்பட்ரா ஆகியோர் கவுதம் ரஜாக்கை செல்போனில் தொடர்பு கொண்டனர்.
தற்கொலை
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் மாலை ராஜிப்பட்ரா வேலை முடிந்து வீட்டுக்கு சென்றபோது கவுதம்ரஜாக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து கவுதம்ரஜாக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.