தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே முறையூர் கிராமத்தில் உள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சுதா (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் சென்னையில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த சுதா கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான முறையூருக்கு வந்து இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுதாவின் மாமனார் சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.மங்களம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


Next Story