விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
காரிமங்கலம் அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி
காரிமங்கலம்
காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி இலங்கை முகாமை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 37). லாரி டிரைவர். இவரது மனைவி சிந்தினி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜ்குமார் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story