பெண் தற்கொலை
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பாஞ்சாலி (வயது 50). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாஞ்சாலி மாடு மேய்க்கும் போது கீழே விழுந்தார். இதனால் அவருடைய இடது பக்க தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. மேலும் கால் வலியும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்தநிலையில் பாஞ்சாலி வீட்டில் விஷம் தின்றார். சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த தற்கொலை குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story