தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 23 May 2023 11:00 AM IST (Updated: 23 May 2023 11:04 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கம்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 35). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வேடியப்பன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக வேடியப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story