தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் அருண் பாண்டியன் (வயது 23). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் இவரை கட்டு விரியன் பாம்பு கடித்துவிட்டது.
இதற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார். ஆனாலும் பாம்பு கடித்த இடத்தில் வலி இருந்து கொண்டே இருப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தில் அருண்பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story