வாழப்பாடி அருகேமுடிதிருத்தும் தொழிலாளி தற்கொலைகந்துவட்டி கொடுமையா? போலீசார் விசாரணை
வாழப்பாடி
வாழப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளி விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார்.
முடிதிருத்தும் தொழிலாளி
வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). முடிதிருத்தும் தொழிலாளி. இவர் சிங்கிபுரம் பகுதியில் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் சிலரிடம் ரூ.3 லட்சத்துக்கு மேல் வாங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கந்துவட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.
விசாரணை
பின்னர் அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்று நேற்று இரவு 9 மணி அளவில் இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார் பிரபாகரன் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.