வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

சிவகங்கை

திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சரகம் ஏ.ஆர். உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் சோலகிரி (வயது 19). அய்யனார் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சம்பவத்தன்று சோலகிரி தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய தாய் அழகுமீனாளிடம் பணம் கேட்டுள்ளாராம். அதற்கு அவரது தாய் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோலகிரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அழகுமீனாள் பூவந்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story