சேலம் மத்திய சிறையில் பரபரப்பு:ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி


சேலம் மத்திய சிறையில் பரபரப்பு:ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி
x

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

சேலம்

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை முயற்சி

சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 50) என்பவர் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பழனிசாமி அறையில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. அதாவது அவர் தற்கொலை செய்ய போவதாக கூறி சத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்டதும் அந்த பிளாக்கில் ரோந்து பணியில் ஈடுபட்ட வார்டர் நவீன் அங்கு வேகமாக சென்றார். அப்போது அங்கு பழனிசாமி சட்டைகளை கிழித்து அதை கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்வதற்கு முயன்றது தெரியவந்தது.

வேறு ஒரு அறைக்கு மாற்றம்

இதையடுத்து அவர் பழனிசாமியை தற்கொலை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினார். சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத் விசாரணை நடத்தினார். பின்னர் பழனிசாமி வேறு ஒரு அறைக்கு உடனடியாக மாற்றப்பட்டார். மேலும் உரிய நேரத்தில் விரைவாக சென்று கைதியை தற்கொலை செய்ய விடாமல் காப்பாற்றிய வார்டர் நவீனை கண்காணிப்பாளர் பாராட்டினார்.

1 More update

Next Story