ஊராட்சி மன்ற உறுப்பினர் தற்கொலை முயற்சி


ஊராட்சி மன்ற உறுப்பினர் தற்கொலை முயற்சி
x

ஊராட்சி மன்ற உறுப்பினர் தற்கொலை முயற்சி செய்தார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் ஊராட்சி ஆரியப்படையூர் 2-வது வார்டு உறுப்பினர் சந்தானதேவி (வயது38). இவருடைய கணவர் மாசிலாமணி. இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் கடன் கொடுத்தவர், கடனை உடனடியாக திருப்பி தரும்படி சந்தான தேவியிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சந்தானதேவி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எரும்பு மருந்தை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சந்தான தேவியை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story