ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை முயற்சி


ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை முயற்சி
x

பள்ளிபாளையத்தில் ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

ஓமலூர் சின்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ராஜம்மாள். இவர் தொற்று நோயால் அவதிப்பட்டும், வயிற்று வலியாலும் கடும் சிரமப்பட்டு வந்திருக்கிறார். இந்தநிலையில் மூதாட்டி வயிற்று வலி தாங்க முடியாமல் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story