சாராயம் விற்றதாக கைதானவர் மனைவி தற்கொலை முயற்சி


சாராயம் விற்றதாக கைதானவர் மனைவி தற்கொலை முயற்சி
x

கெங்கவல்லி அருகே சாராயம் விற்றதாக கைதானவர் மனைவி தற்கொலை முயன்றார்.

சேலம்

கெங்கவல்லி

கெங்கவல்லி அருகே ஆனையம்பட்டி ஊராட்சி குயவர் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 23). இவர், சாராயம் விற்றதாக கெங்கவல்லி போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 140 லிட்டர் சாராயம், 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே கணவன் கைதானதால் வேதனை அடைந்த அஜித்குமாரின் மனைவி சந்தியா, மாமியாருடன் தகராறு செய்து விட்டு விஷத்தை தின்று தற்கொலைக்கு முயன்றது. அவரை போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story