காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி


காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

விஷம் குடித்த காதலி

பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயது லாரி டிரைவரும், அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவியான 19 வயது இளம்பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள எண்ணினர்.

இதனை அறிந்த லாரி டிரைவரின் பெற்றோர், அவருக்கு வேறொரு பெண்ணை நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த கல்லூரி மாணவி கடந்த 23-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

திருமணம் நிறுத்தம்

அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதால் விஷம் குடித்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரின் பெற்றோரிடம் விசாரித்தனர். மேலும் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் லாரி டிரைவரின் விருப்பப்படி, காதலியை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story