கணவன் பலி; மனைவிக்கு தீவிர சிகிச்சை


கணவன் பலி; மனைவிக்கு தீவிர சிகிச்சை
x

திருவையாறு அருகே கணவன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டதால் கணவன்- மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா். இதில் கணவன் உயிரிழந்தாா். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே கணவன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டதால் கணவன்- மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா். இதில் கணவன் உயிரிழந்தாா். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோய்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள காருகுடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சந்தானம்(வயது40). இவருடைய மனைவி கற்பகம்(31). சந்தானம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.அவரது இடது கால் விரல் அகற்றப்பட்டு கால் அழுகியதால், தூக்கம் இல்லாமல் இருந்துவந்தார். சந்தானம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால் அவரது மனைவி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நோய் கொடுமையால் மனம் உடைந்த சந்தானமும் அவரது மனைவி கற்பகமும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று மதியம் வீட்டில் ஓரே சேலையில் தூக்குப்போட்டுக்கொண்டனர்.இதைக்கண்ட இவர்களின் மகள் சத்தம் போட்டாள். உடனேஅக்கம் பக்கத்தினர் வந்து 2 பேரையும் காப்பாற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தானம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிகிச்சை

மனைவி கற்பகத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து இறந்து போன சந்தானம் அண்ணன் பஞ்சநாதன் (42) கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story