தந்தை கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை


தந்தை கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:16:13+05:30)

தேர்வுக்கு படிக்காமல் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சிவகங்கை


தேர்வுக்கு படிக்காமல் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

செல்போனில் விளையாட்டு

சிவகங்கை அருகே உள்ள கன்னிமார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், ராஜேந்திரன். இவருக்கு 3 மகள்கள். அதில் 2-வது மகள் பவிதாஸ்ரீ (வயது 13). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு பவிதாஸ்ரீ, தேர்வுக்கு படிக்காமல் செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது..

எனவே தந்தை ராஜேந்திரன் கண்டித்தாராம். இதனால் மனவருத்தம் அடைந்த பவிதாஸ்ரீ வீட்டில் இருந்த டீசலை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

மாணவி சாவு

மாணவி பவிதாஸ்ரீ அலறல் கேட்டு ஓடிவந்த ராஜேந்திரன் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, அவளை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் பவிதாஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இந்த விபரீத சம்பவம் தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story