வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு அருகே உள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் பாபுராஜ். இவருடைய மகன் ரதீஷ் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வள்ளத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு ரதீஷ் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார். தொடர்ந்து விபத்தில் சிக்கியதால் ரதீஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் ரதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி மண்டைக்காடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ரதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.