தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை


தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நெல்லையில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை சங்கர்நகர் பண்டாரக்குளம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் காளீஸ்வரன் (வயது 24). இவர் சங்கர்நகர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு தவணை முறையில் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். அந்த மோட்டார் சைக்கிளுக்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்தாா். இந்த நிலையில் காளீஸ்வரன், உரிய நேரத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பணம் கட்ட முடியாத விரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நெல்லை தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story