தற்கொலை செய்த வாலிபர் உடல் எரிப்பு


தற்கொலை செய்த வாலிபர் உடல் எரிப்பு
x

தற்கொலை செய்து வாலிபரின் உடல் எரிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மகன் முரளிதரன் (வயது 20). இவர் தனது குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனே உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் முரளிதரன் உடலை எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் ராமசுப்பிரமணியன் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


1 More update

Next Story