வாலாங்குளத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


வாலாங்குளத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாலாங்குளத்தில் காதல் ஜோடிகளின் சில்மிஷத்தை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

வாலாங்குளத்தில் காதல் ஜோடிகளின் சில்மிஷத்தை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

காதல் ஜோடிகள்

கோவை உக்கடம் வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு படகு சவாரி திட்டமும் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு விடுமுறை நாட்கள் மற்றும் தினசரி மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

அதோடு அங்குள்ள பூங்காவில் தினமும் காதல் ஜோடிகள் சுற்றித் திரிவதை காண முடிகிறது. இதில் சில ஜோடிகள் மறைவான பகுதிகளில் அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

மாலையில் இருள் சூழும் நேரத்தில் சில காதல் ஜோடிகள் வரம்பை கடந்து நெருக்கம் காட்டுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் ரோந்து சென்று காதல் ஜோடிகளுக்கு அறிவுரை கூறி கண்டித்தனர். ஆனாலும் அந்த பூங்கா காதல் ஜோடிகளின் மையமாக திகழ்கிறது.

மேலும் வாலாங்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா மற்றும் போதை நடமாட்டம் உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பூங்கா பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது. அங்கே மது வாங்கி குடித்து விட்டு மது பிரியர்கள் பூங்காவில் உலா வருகின்றனர்.

இதனால் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுகிறது.இது போன்ற செயல்கள் நடப்பதை தடுக்கும் வகையில் வாலாங் குளத்தின் முக்கியமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டு உள்ளது.

அவை, இரவு நேரத்திலும் காட்சிகளை துல்லிய மாக பதிவு செய்யும் திறன் படைத்தவை ஆகும்.

கண்காணிப்பு கேமராக்கள்

அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை மாநகராட்சி பிரதான அலுவலகத் தில் இருந்தே ஊழியர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் வாலாங்குளக்கரையில் காதல் ஜோடிகளின் சில்மிஷம் மற்றும் சமூக விரோத நபர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் வாலாங்குளம் பகுதியில் காவலாளிகளை நியமித்து சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.


Next Story