சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுகந்த பரிமளேஸ்வரர் கோவில்
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க சுகந்த பரிமளேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி திருவிழா கடந்த மாதம் 24-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து திருத்தேரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர்.
இதில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.