பூவேந்தியநாதர் கோவிலில் சுமங்கலி பூஜை
ஆடிப்பூரத்தையொட்டி பூவேந்தியநாதர் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பவள நிற வள்ளி அம்மன் சமேத பூவேந்திய நாதர் கோவிலில் ஆடிப்பூரம் அம்பாள் வளைகாப்பு மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரத்துடன் பொன்னூஞ்சல் உற்சவம் நடந்தது. பெண்கள் சுமங்கலி பூஜை செய்தனர்.
முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
Related Tags :
Next Story