கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்


கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்

நாகப்பட்டினம்


நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் டி.ஜுலியஸ் அற்புதராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள வலை பயிற்சி மையத்தில், மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் வருகிற 5-ந் தேதி முதல் நாள்தோறும் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

முகாமில், 19 வயதிற்குட்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் ஈடுபட 40 விளையாட்டு வீரர்கள் வருகிற 4-ம் தேதி மாலை 3 மணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முதல் நிலை பயிற்சியாளர் ரியாஸ் அகமது வருகிற 11-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார். மேலும் விவரங்களுக்கு, கோடைகால பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் அருணாசலத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story