கோடைகால விளையாட்டு பயிற்சி


கோடைகால விளையாட்டு பயிற்சி
x

மாணவ-மாணவிகளுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ - மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வருகிற 3-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தடகளம், கபடி, ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கையுந்து பந்து, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து, திருப்பாற்கடல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆக்கி விளையாட்டிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாம் காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரையும், மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரையும் நடைபெறும்.

சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு இப்பயிற்சி முகாமினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தினமும் ஊட்டச்சத்து மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். ராணிப்பேட்டை மாவட்ட மாணவ-மாணவிகள் அந்தந்த பயிற்சி மையத்திற்கு நேரடியாக வந்து பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story