கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்


கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்
x

கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையில் டேக்வாண்டோ தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு விளையாட்டு அலுவலர் லெனின் வழிக்காட்டுதலின் பேரில், பயிற்சியாளர்கள் பரணி தேவி, துர்கா உள்ளிட்டோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி, விடுதி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். வருகிற 15-ந்தேதி வரை வழங்கப்படும் பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் பயிற்சியின் போது சிறப்பாக விளையாடிய மாணவ-மாணவிகளுக்கு தினமும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள், என்று விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.


Next Story